தூய்மையானது, ஆழமானது, எதிர்ப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!
காதலா? நட்பா? என்று
ஒவ்வொரு முறையும்
கலந்தாய்வு நடக்கிறது
நம்முள்!
காதல் என்கிறேன்
நான்!
நட்பு என்கிறாய்
நீ!
பெயர்தான் வேறு!
உணர்வுகள் ஒன்றுதான்!
புரிந்துகொள்கிறோம்
இறுதியில்!
ஆக்கம் : இரா.ஜெகன் மோகன் at 1:27 AM
4 நட்புகளின் பதில்கள்:
//உணர்வுகள் ஒன்றுதான்!
புரிந்துகொள்கிறோம்
இறுதியில்! //
;)))))))))
ஆனால் நட்பு வேறு
காதல் வேறு
நூலிழை வித்தியாசம்
"காதலா? ..நட்பா..?"
நட்பில் கனம் கூடினால் காதல்.காதலில்
கணம் குறைந்தால் தப்பி விடும் நட்பு.
என் கருத்து எப்படி ஜெகன் ??!!.
//ஆனால் நட்பு வேறு
காதல் வேறு
நூலிழை வித்தியாசம்
//
நாகை சிவா,
தங்கள் கருத்துக்கு நன்றி!
//நட்பில் கனம் கூடினால் காதல்.காதலில்
கணம் குறைந்தால் தப்பி விடும் நட்பு.
//
நன்று துபாய் ராஜா அவர்களே!
ஆமாம்! அதென்ன உங்கள் படம் சரியாகத் தெரியவில்லையே!
Post a Comment