Monday, September 29, 2008

சிநேகிதியே..!


உன் ரசனைகளின்

விவரிப்பில் என்னை

உன் ரசிகனாக்குகிறாய்!


விழிகள் விரித்து

ஒவ்வொன்றாய்

நீ வியந்து கூறும்

விஷயங்கள் ஒவ்வொன்றும்

முன்னெப்போதும் இல்லாமல்

அழகாய்த் தோன்றுகின்றன

எனக்கு!


வண்ணத்துப் பூச்சியொன்றை

பிடித்து உன்

கைகளில் கொடுத்தேன்!

வின் விரல்களில்

கண்டபிறகுதான்

வண்ணத்துப் பூச்சியின்

அழகு

எனக்குப் புரிகிறது!


உன் முகம்

சிவக்கும்போதெல்லாம்

ரோஜாக்கள்

தலை தாழ்த்திக்

கொள்கின்றன!

உன் வெட்கம்

பார்த்து

அவைகளுக்கும்

வெட்கமாம்!


ரோஜா இதழ்களை

வருடிப் பார்க்கிறாய்

உன் இதழ்களால்!

எது மென்மையென்று

கண்டுகொள்ள

எனக்கும் ஆசைதானடி!


நீ

பொய்க்கோபம் கொண்டாடும்

தருணங்களைக்

காண வேண்டியே

இப்படியெல்லாம்

பொய்யாய் வர்ணிக்கிறேன்

ஒவ்வோர் முறையும்!

ஆமாம்!

உன் பொய்க்கோபம்

எனக்குக்

கொள்ளை அழகுதானடி!


7 நட்புகளின் பதில்கள்:

said...

பொய்க் கோபமும், விவரிப்பும் அழகு.. :)

said...

நன்றி தமிழ் பிரியன்!

said...

உன் முகம்

சிவக்கும்போதெல்லாம்

ரோஜாக்கள்

தலை தாழ்த்திக்

கொள்கின்றன!

உன் வெட்கம்

பார்த்து

அவைகளுக்கும்

வெட்கமாம்!


இது ரொம்ப பிடிச்சது

said...

நன்றி தமிழ் சினிமா!

said...

ஆஹா!
முதல்ல தமிழ் பிரியன் அடுத்து தமிழ் சினிமா!

அடுத்தது யாரோ?

said...

வண்ணத்துப் பூச்சியொன்றை


பிடித்து உன்


கைகளில் கொடுத்தேன்!


வின் விரல்களில்


கண்டபிறகுதான்


வண்ணத்துப் பூச்சியின்


அழகு


எனக்குப் புரிகிறது!

நல்லாதான் இருக்கு

said...

நன்றி காஜன்1