இணையம் இணைக்கிறது இதயங்களை!
இணையத்தால்
இணைந்தனவோ
நம் இதயங்கள்
இரண்டும்!
கணினித் திரையினில்
உன் கண்களைத்தான்
பார்க்கிறேன் நான்!
மின்னஞ்சல் வரிகள்
எல்லாம் நம்
நெஞ்சங்களின் வண்ணங்களே!
காலையில் எழுவதற்கு
அலாரம் எதற்கு?
உறங்கினால்தானே நான்!
நீதான் மெசஞ்சரில்
பிங்க் செய்கிறாயே!
நீ வந்தபின்புதானே
எனக்கு பொழுது புலர்ந்தெதென்பது
புலனாகிறது!
நிஜமான உலகில்
நீண்ட இடைவெளிதான்
நமக்குள்!
சைபர் ஸ்பேசில்மட்டும்
சந்தித்துக் கொள்கிறோம்!
நித்தமும்
சப்தமிடாத
முத்தங்களுடன்!
6 நட்புகளின் பதில்கள்:
நல்லாவே முற்றி விட்டது போல் இருக்கே....!!!;-)
படங்கள் அருமை!!
//நல்லாவே முற்றி விட்டது போல் இருக்கே....!!!;-)
படங்கள் அருமை!!
//
வருகைக்கு மிக்க நன்றி நோநோ!
தங்கள் பெயர்க்காரணம் என்னவோ?
(நோநோ! அதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று சொல்ல மாட்டீர்கள்தானே?)
நன்றாக இருக்கிறது.
//மின்னஞ்சல் வரிகள்
எல்லாம் நம்
நெஞ்சங்களின் வண்ணங்களே!//
காலத்திற்கேற்ற கவிதை.
அந்த பென்சிலும் பின்புலமும் ரொம்பவே நல்லா இருக்கு.
//அந்த பென்சிலும் பின்புலமும் ரொம்பவே நல்லா இருக்கு.
//
வாங்க முத்து லெட்சுமி!
சொன்னாலும் சொன்னீங்க!
பிளாக்கர் பீட்டாவுக்கு மாத்தியே ஆகணும் என்ற சூழ்நிலையில் மாற வேண்டியதாப் போச்சு!
//நன்றாக இருக்கிறது.//
மிக்க நன்றி சேதுக்கரசி அவர்களே!
Post a Comment