உன்னைப் பிடிக்கும் எப்போதும்
உன்னை
வம்புக்கிழுத்தே
வாய் திறக்க
வைக்கிறேன்!
நீ சண்டையிடும்போதும்
எனக்கு உன்னை
பிடித்திருக்கிறது!
மௌனமாய் இருக்கும்
தருணங்கள் போலவே!
தூய்மையானது, ஆழமானது, எதிர்ப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!
உன்னை
வம்புக்கிழுத்தே
வாய் திறக்க
வைக்கிறேன்!
நீ சண்டையிடும்போதும்
எனக்கு உன்னை
பிடித்திருக்கிறது!
மௌனமாய் இருக்கும்
தருணங்கள் போலவே!
ஆக்கம் : இரா.ஜெகன் மோகன் at 4:49 AM 2 நட்புகளின் பதில்கள்
சந்தித்தும் பேசாத
மௌனம் ஏன் தோழி?
மௌனம் ஓர்
முள் படுக்கை
என்று தெரியுமா
உனக்கு?
என்ன தவறு
செய்தேனென்று
இத்தகைய தண்டனை?
மௌனத்தைக்
கலைத்து
ஓர்
வார்த்தை சொல்
போதும் எனக்கு!
"இறந்து விடு" என்று!
ஆக்கம் : இரா.ஜெகன் மோகன் at 12:28 AM 4 நட்புகளின் பதில்கள்